×

நெல்லையில் இரட்டை கொலை சம்பவம் – கனிமொழி கண்டனம்

சென்னை: நெல்லையில் இரட்டை கொலை சம்பவத்தை குறித்து மெத்தனமாக செயல்படாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்துக்கு திமுக எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தையும் அவரது 5 வயது மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்கெட்டுவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிட்டது. தவெக அரசு, முன்விரோதம் காரணமாகத் தொடரும் இப்பிரச்சனையில் மெத்தனமாக செயல்படாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அப்பகுதியில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

Tags : Nellai double murder ,Kanimozhi ,Chennai ,DMK ,Nellai double murder incident ,Veeravanallur ,Tirunelveli district… ,
× RELATED கால்நடைகளை சாலைகளில் விடும் நபர்கள்...