- நடுப்பகுதி
- கமிஷன்
- தில்லி
- புங்கிபூர்
- தொகுதியில்
- பீகார்
- எல்.
- நிதின் நபின்
- பஜவா
- எம். பி. யாகா
- தாத்தியா தொகுதி
- மத்யா
- பிரதேசம்
- மீ.
- காங்கிரஸ்
டெல்லி: பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் பாஜகவைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாக சமீபத்தில் பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேத்தின் தாட்டியா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரசைச் சேர்ந்த ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான யோகேஷ்பாய் நரேந்தாஸ் படேல் சமீபத்தில் காலமானார்.
இதனால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு இடைத்தேர்தலுக்கான எண்ணிக்கை ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து 3 மாநிலங்களில் இடைத்தேர்தல் அறிவித்த தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடவில்லை. மஞ்சள்பூருக்கு முன்பே திருச்சி கிழக்கு காலியான நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
