×

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆக்கிரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்

 

தஞ்சாவூர், ஜூலை 2: புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் முன்பு கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் உள்ளதாகவும், இந்தக் கடைகளை அகற்ற வேண்டும் என்றும் ‌அரண்மனை தேவஸ்தானம் சார்பில் தஞ்சை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவுப்படி நீதிமன்ற ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு கடைகளை அகற்றி உள்ளனர்.

நேற்று மூன்றாவது நாளாக போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற ஊழியர்கள் கடைகளை அகற்ற வந்தனர். அப்போது கடை நடத்துபவர் எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். நாங்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம் என கூறினார். இருந்தாலும் நீதிமன்ற ஊழியர்கள் தீர்ப்பின் அடிப்படையில் நாங்கள் அகற்றியாக வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடையை அகற்றினர். இதுவரை மூன்று கடைகள் அகற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு கடைகள் முழுமையாக அகற்றப்படும் என நீதிமன்ற ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரண்மனை தேவஸ்தான இடத்திற்கு சொந்தமாக அங்கு 36 கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Punnainallur Mariamman Temple ,Thanjavur ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்