×

திருப்பூர் உழவர் சந்தைகளில் 10.76 கோடிக்கு காய்கறி விற்பனை

 

திருப்பூர், ஜூலை 2: விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்யும் வகையில் திருப்பூர் மாநகரில் தென்னம்பாளையம் பகுதியில் தெற்கு உழவர் சந்தை, புதிய பேருந்து நிலையம் பகுதியில் வடக்கு உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த மே மாதத்தை பொருத்தவரை தெற்கு உழவர் சந்தைக்கு 1,963 மெட்ரிக் டன் காய்கறிகள் 6,634 விவசாயிகளால் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ரூ.7.89 கோடிக்கு விற்பனை நடந்தது.

அதேபோல் திருப்பூர் வடக்கு உழவர் சந்தைக்கு 2,854 விவசாயிகள் மூலம் 723 டன் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரத்தானது. இலம் 2.87 கோடிக்கு விற்பனை நடந்தது. இரு வேறு உழவர் சந்தைகளிலும் கடந்த மாதம் ரூ.10 கோடியே 76 லட்சத்து 8 ஆயிரத்திற்கு விற்பனை நடைபெற்று உள்ளது. கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் வியாபாரம் குறைந்திருப்பதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

Tags : Tiruppur Farmer Markets ,Tiruppur ,South Farmer Market ,South Palayam ,North Farmer Market ,New Bus Station ,Tiruppur Municipality ,
× RELATED குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு