×

வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

 

பல்லடம், ஜூலை 9: பல்லடம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (46). பனியன் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து நேற்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு சவரன் தங்கச்சங்கிலி, அரை சவரன் மோதிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து காளியப்பன் பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காளியப்பனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சமீர் (20), என்பவர் காளியப்பன் வீட்டிற்குள் புகுந்து நகைகள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Palladam ,Kaliyappan ,Annanagar ,Banyan ,
× RELATED குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு