×

கோடை அறுவடை முடிந்து குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியது: மின்சாரம் இன்றி தண்ணீர் பாய்ச்ச பம்பு செட் இயக்குவதில் சிக்கல்

 

தஞ்சாவூர், ஜூன் 29: தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை அறுவடை முடிந்து குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியது. மின்சாரம் இன்றி தண்ணீர் பாய்ச்ச பம்பு செட் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் நெல் களஞ்சியமாக ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டம் விளங்கி வருகிறது. குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில் சம்பா, குறுவை, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். மேலும் ஒரு சில பகுதியில் பம்பு செட் மூலம் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை சாகுபடியும் நடைபெறும். நெல்லுக்கு அடுத்தபடியாக தஞ்சை மாவட்டத்தில் தென்னை, வாழை, உளுந்து, பயிர், எள், கரும்பு, வெற்றிலை, கடலை, மக்காச்சோளம், காய்கறிகள், கீரை வகைகள் உள்ளிட்டவையும் பயிரிடப்படும்.

இருப்பினும் அதிகப்படியாக அதிக ஏக்கர்களில் நெல் சாகுபடி தான் நடைபெறும். தற்போது தஞ்சை மாவட்டத்தில் கோடை அறுவடை முடிந்து குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளது. இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 88 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கோவை சாகுபடி நடைபெற்று உள்ளது. இந்த சாகுபடிக்காக விவசாயிகள் தங்கள் நிலங்களை உழவு செய்வது, நாட்றாங்கால் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளிலும் தயாரான நாற்றங்கால்களை பறிப்பதும் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலையில் தஞ்சையை அடுத்த ரெட்டிபாளையம் பகுதியில் தண்ணீர் விட்டு உழவு செய்த வயல்களில் இயந்திரம் மூலம் நடவு பணிகளை தொடங்கியுள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணை திறக்கப்படும் என காத்திருந்தோம். ஆனால் போதிய தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் பம்புசெட் மூலம் தண்ணீர் எடுத்து சாகுபடியை தொடங்கியுள்ளோம். மும்முனை மின்சாரம் போதிய அளவில் கிடைக்காததால் தண்ணீர் பாய்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அதிலும் மின்வெட்டு காரணமாக கம்பு செட்டுகளை இயக்குவதிலும் அவதிப்பட்டு வருகிறோம். தக்கல் முறையில் முறையில் மின்விநியோகத்திற்கு விண்ணப்பித்து பல லட்சம் ரூபாய் மின்சாரத் துறையில் பணம் கட்டி காத்திருக்கிறோம். எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மின்வெட்டு பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

அரசு அதிகாரிகள் பணியில் குறுக்கிடும் தவெக நிர்வாகிகள்
தஞ்சை கல்லு குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் வந்திருந்தார். அப்போது அவருடைய ஆதரவாளர்களும் வந்திருந்தனர். இந்த நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இல்லாத தவெக நிர்வாகிகள் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏன் இந்த பணிகள் செய்யவில்லை, ஏன் எங்களிடம் கூறவில்லை, எதுவாக இருந்தாலும் எங்களிடம் தான் நீங்கள் கூற வேண்டும் என அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் சண்டை போடும் நோக்கில் பேசினார்கள். மக்கள் பிரதிநிதி இல்லாத கட்சி நிர்வாகிகள் எங்கும் ஆய்வு செய்யக்கூடாது, அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடாது என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

அதையும் மீறி கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகளின் செயல்களில் குறிக்கிடுவது அங்கு இருந்தவர்கள் மத்தியில் முகம் சுளிக்கும் அளவிற்கு இருந்தது. போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தவெக நிர்வாகி ஒருவர் முதல்வர் படத்தை கையில் பிடித்தவாறு நின்று கொண்டிருந்தார். தவெக நிர்வாகிகள் எங்கு சென்றாலும் முதல்வர் படத்தை எடுத்து தான் செல்வார்களா என பலர் கேலி செய்தனர். மின்வெட்டு காரணமாக கம்பு செட்டுகளை இயக்குவதிலும் அவதிப்பட்டு வருகிறோம். தக்கல் முறையில் முறையில் மின்விநியோகத்திற்கு விண்ணப்பித்து பல லட்சம் ரூபாய் மின்சாரத் துறையில் பணம் கட்டி காத்திருக்கிறோம். எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மின்வெட்டு பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

 

Tags : Kuruvai ,Thanjavur ,Thanjavur district ,Delta district ,Tamil Nadu.… ,
× RELATED வீடு கட்டுவதற்கு ரூ.50,000 மாமூல் கேட்டு தவெக நிர்வாகி மிரட்டல்