×

சென்னையில் ரூ.284 கோடி மதிப்பீட்டிலான நடைபாதை திட்ட பணிகளுக்கான டெண்டர் ரத்து

சென்னை: சென்னையில் ரூ.284 கோடி மதிப்பீட்டிலான நடைபாதை திட்ட பணிகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. பல முறைகேடு கண்டறியப்பட்டதால் 35 டெண்டர்களையும் சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.

சென்னையில் ரூ.284 கோடி மதிப்பீட்டிலான நடைபாதை திட்ட பணிக்கான டெண்டர் சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. பல முறைகேடு கண்டறியப்பட்டதால் 35 டெண்டர்களையும் சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மீட்டருக்கு நடைபாதை அமைக்க வழக்கமான விலையை விட 4 மடங்கு அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். திட்ட அறிக்கையில் தேவையற்ற பணிகள் சேர்க்கப்பட்டதால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. நடைபாதைக்கான விரிவான திட்ட அறிக்கை மறு ஆய்வு செய்யப்பட்டு, திருத்தங்களுடன் மீண்டும் வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

 

Tags : CHENNAI ,Chennai Municipal Corporation ,
× RELATED அரசு மற்றும் அரசு உதவி பெறும்...