×

முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா-அயர்லாந்து மோதல்

பெல்பாஸ்ட்: இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, பெல்பாஸ்ட் சிவில்சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.00 மணிக்கு தொடங்குகிறது. அயர்லாந்து சென்றுள்ள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது, பெல்பாஸ்டில் இன்றும் நாளை மறுநாளும் நடைபெற உள்ள இந்த தொடரைத் தொடர்ந்து, இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்திய அணிக்கு ஷ்ரேயாஸ் அய்யர் முதல் முறையாக கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி இந்திய சீனியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடர் மற்றும் சமீபத்தில் இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் சூரியவன்ஷியின் ஆட்டம், உலக அளவில் ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் பிரபலங்களும் வியந்து பாராட்டும் அளவுக்கு இருந்தது.

இந்த நிலையில், அயர்லாந்துடன் இன்று நடக்க உள்ள முதல் டி20ல் அவர் அறிமுகவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சாம்சன், அபிஷேக், இஷான், ஷ்ரேயாஸ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் அணிவகுப்பதால் சூரியவன்ஷிக்கு இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags : India ,Ireland ,T20 ,Belfast ,Belfast Civil Service Cricket Club ,
× RELATED 65-வது தேசிய மாநிலங்களுக்கு இடையிலான...