பெரம்பலூர், ஜூன் 23: தவெக அரசு தேர்தல் பரப்புரையில் வழங்கிய வாக்குறுதி படி பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு முதல்வர் தேர்தல் பரப்புரையில் விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிப்படி, விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக, தமிழ்நாடு தவெக அரசின் முதல்வர் விஜய் தனது தேர்தல் பரப்புரையில், விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதியின் படி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்யகோரி, பெரம்பலூர் பாலக்கரை அருகே, கலெக்டர் அலுவலக சாலையில் ஒரு நாள் அடையாளம் உண்ணா விரதப்போராட்டத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தபோராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மருதரசன் தலைமை வகித்தார். இதில் பெண்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட 70க்கும் மேற்பட்டடோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதன்பிறகு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயபிரிவு மாநில தலைவர் சங்க சண்முக சுந்தரம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் காய்கறிகளை கையில் ஏந்தியபடி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலக சாலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
