- பாலியல் வன்கொடுமைக்கு எதிரான
- முத்துப்பேட்டை
- முத்துபேட்டை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தாதாத் ஜமாஅத்
- தவ்ஹீத் ஜமாஅத்
- திருவரூர் தெற்கு மாவட்டம்
முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பேரணி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடந்தது.முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளைகள் சார்பாக பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பேரணி மற்றும் விழிப்புணர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது முன்னதாக ஆவே.நே அரசு தொடக்கப்பள்ளியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மாவட்ட துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் முகமது அசாருதீன், மாவட்ட செயலாளர் ஹாஜா முஹைதீன், மாவட்ட துணை செயலாளர் நைனா முகமது, மாவட்ட மருத்துவரணி அப்துல் ரஹ்மான், மாவட்ட தொண்டரனி ஹாஜா முகைதீன், மாவட்ட மாணவரனி ராஜா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர் யாசர் அராஃபத் ஃபிர்தவ்ஸி, மாவட்ட பொருளாளர் முஹம்மது சித்தீக் ஆகியோர் கோஷங்கள் எழுப்பினர். மாநில செயலாளர் சி.வி.இம்ரான் விழிப்புணர் ஏற்படுத்தி பேசினார். இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதியாக மாவட்ட மருத்துவரனி அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.
