- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகக்
- இராசிபுரம்
- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
- பொன்னுசாமி
- மாநில பொதுச் செயலாளர்
- சுந்தரம்
ராசிபுரம் : ராசிபுரத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில் தமிழக விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:
விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் உழவர் தின பேரணி மற்றும் மாநாடு பழைய தர்மபுரி ராமக்காள் ஏரிக்கரை அருகில் வரும் 5ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டும். மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி, விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்றுள்ள பயிர் கடனை பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். கோதாவரி -காவிரி- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கும்.
பாலாறு குறுக்கே அணைக்கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கைக்கும், சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா அரசின் நடவடிக்கைக்கும் மத்திய அரசு அனுமதி தரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
