கொட்டி தீர்த்த பலத்த மழை

 

தேன்கனிக்கோட்டை, ஜூன் 22:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் மழை பெய்யாததால் ஏரி, குளங்கள் வற்றி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றி வருவதால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி, தேன்கனிக்கோட்டையில் காலை முதல் மதியம் வரை பலத்த மழை பெய்தது. இந்நிலையில், நேற்று மதியம் 3 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையால் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. தொடர்ச்சியாக, 2 நாட்கள் நல்ல மழை பெய்துள்ளதால் ஏரி, குளங்களில் மழை நீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது நிலக்கடைலை விதைப்பு பருவம் என்பதால், விவசாயத்திற்கு தேவையான அளவில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அடுத்த மாதம் ராகி பயிர் செய்ய விவசாயிகள் உழவு பணிகள் மேற்கொண்டு வயல்களை தயார் செய்து வருகின்றனர்.

Related Stories: