×

குடும்பத்தினரால் உயிருக்கு ஆபத்து; கும்பமேளா புகழ் மோனாலிசாவுக்கு பாதுகாப்பு

திருவனந்தபுரம்: பிரயாக்ராஜ் கும்பமேளா மூலம் புகழ் பெற்றவர் மோனாலிசா. இதன் மூலம் இவருக்கு சினிமா மற்றும் விளம்பரப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. இவருடைய சொந்த ஊர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மகேஸ்வர் ஆகும். இந்நிலையில் மோனாலிசாவுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முகம்மது பர்மான் கான் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு மோனாலிசாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளா வந்த இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து அறிந்த மோனாலிசாவின் தந்தை, மகேஸ்வர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னுடைய மகளுக்கு 16 வயது தான் ஆகியுள்ளது என்பதால் அவரை திருமணம் செய்த முகம்மது பர்மான் கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் குடும்பத்தினரால் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடவேண்டும் என்று கூறி மோனாலிசா கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மோனாலிசாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவிட்டது.

Tags : Kumbh Mela ,Monalisa ,Thiruvananthapuram ,Maheshwar ,Madhya Pradesh ,Maharashtra… ,
× RELATED மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து:...