×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,560க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.380 குறைந்து ஒரு கிராம் ரூ.13,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.15 குறைந்து ரூ.255க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,060க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12,480க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.270க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று மாலையில் தங்கம் விலையில் திடீரென மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், பவுனுக்கு ரூ.880 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,600க்கும் விற்கப்பட்டது. மாலையில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.380 குறைந்து ஒரு கிராம் ரூ.13,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்றும் இன்றும் குறைந்து காணப்படுவதால் நகை வாங்குவோருக்கு மகிழிச்சியில் உள்ளனர்.

Tags : Chennai ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது –...