×

கேமரா முன் வார்த்தைக்கு வார்த்தை சொல்லி கொடுக்கும் நிர்வாகி: தவெக எம்எல்ஏ இவருதான்… ஆனா… டப்பிங் பண்ணாம அவருக்கு பேசவே தெரியாது… வைரலாகும் வீடியோ

சேலம்: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 233 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் அவர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இப்படி வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானவர்களை, தங்கள் தொகுதி எம்எல்ஏ என்று மக்களுக்கு தெரியாத நிலையே உள்ளது. அதேநேரத்தில் அவர்கள் அடிக்கும் லூட்டிகளும், ரீல்ஸ் எடுப்பதற்காக செய்யும் சேட்டைகளும் தினமும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சிலரின் நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையையும் கிளப்பி வருகிறது. இந்தவகையில் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ, தேர்தல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக இருப்பவர் கஜேந்திரன். இவர் தன்னை வேட்பாளராக அறிவித்தவுடன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. இதில் என்ன வியப்பு என்றால் அங்கு தான் இருக்கிறது ட்விஸ்ட். அதாவது எப்படி ஊடகங்களிடம் பேசவேண்டும் என்று வார்த்தைக்கு வார்த்தை கட்சி நிர்வாகி ஒருவர் சொல்லிக் கொடுக்கிறார். அவர் சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளை போல் சொல்கிறார் தற்போதைய எம்எல்ஏ கஜேந்திரன். இப்படி அவர் சொல்லி கொடுப்பதை கூட தட்டுத்தடுமாறி, திக்கித்திணறி பேசுவது கூடுதல் ட்விஸ்ட்.

இந்த வகையில், ‘‘என் பெயர் கஜேந்திரன். பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு புதுசு வேட்பாளராக வந்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் தளபதி அலை வீசுகிறது. 234 தொகுதியிலும் தளபதி வெற்றி பெறுவார். பென்னாகரம் தொகுதியை பொறுத்தவரை கட்சிக்காரர்கள் குழம்பி இருக்கிறார்கள். மற்ற கட்சிகாரர்கள் குழம்பி இருக்கிறார்கள். வேட்பாளர்கள் குழம்பி போய் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். விசிலுக்கு கண்டிப்பாக ஓட்டு போட்டு, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்பார்கள். இங்கு என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுப்பார்கள்,’’ என்று பக்கத்தில் இருப்பவர் சொல்லிக் கொடுத்து பேசுவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தான் வேட்பாளர் என்பதையே மற்றவர் சொல்லிக் கொடுத்து சொல்பவர், சட்டமன்றத்தில் தொகுதி மக்களுக்காக சுயமாக என்ன பேசப்போகிறார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் முன்வைத்து வருகின்றனர்.

Tags : MLA ,Thaveka… ,Salem ,Tamil Nadu ,Tamil Nadu Victory Party ,
× RELATED செயற்கை நுண்ணறிவு கருவி எதுவாக...