×

‘‘ஆய்வு செய்ய வந்துள்ளோம்’’ என்று இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தவெக நிர்வாகிகள் கடும் அத்துமீறல்

 

சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தவெக நிர்வாகிகள் ஆய்வு என்ற பெயரில் அட்ராசிட்டி செய்தது மக்களிடையே வெறுப்ைப ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் தினசரி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சாத்தூர் தமிழக வெற்றிக்கழக கிழக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் நிர்வாகிகள் நேற்று மதியம் கோயிலில் அன்னதானம் வழங்கும் பகுதிக்கு வந்துள்ளனர்.

பின்னர்அன்னதானம் நடைபெறும் கூடத்தை ஆய்வு செய்த அவர்கள், சாப்பிடுவதற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர்களிடமும் கோயில் ஊழியர்களிடமும் சரமாரி தேவையில்லாத கேள்விகளை கேட்டுள்ளனர். இது பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆய்வு என்ற பெயரில் அன்னதானம் சாப்பிட வந்தவர்களிடம் கேள்விகளை கேட்டு தொல்லை கொடுத்தது பக்தர்களிடையே எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது.

Tags : Iankudi Maryamman Temple ,Chaturthi ,Atraziti ,Iankudi Mariamman Temple ,Chathur, Virudhunagar district ,
× RELATED சென்னையில் ஜூன் 21 ம் தேதி நீட் தேர்வு...