×

ரூ.2 கோடியில் அமைக்கப்பட்டது; சேதமடையும் முக்கடல் சிறுவர்கள் பூங்காக்கள்: மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?

 

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கும், மற்றும் பொது நிறுவனங்களுக்கும் முக்கடல் அணையில் இருந்தும், புத்தன்அணையில் இருந்தும் குடிநீர் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கிய முக்கடல் அணையை அழகுபடுத்தவும், இங்கு பூங்காவிற்கு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கும் மாநகராட்சி முடிவு செய்து அங்கு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. ஒன்றிய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக முக்கடல் அணையின் முன் பகுதியில் 12 ஆயிரத்து 600 சதுர மீட்டர் பரப்பில் 2 சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ.1 கோடியில் அமைந்துள்ள இந்த பூங்காவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு பூங்கா அமைக்க முடிவுசெய்யப்பட்டது. அதற்காக அம்ரூத் திட்டத்தில் மேலும் ரூ.96 லட்சத்து 80 ஆயிரம் செலவில் 3வது அபிவிருத்தி சிறுவர் பூங்கா 12 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கடந்த 9 வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது. 3வது அபிவிருத்தி பூங்காவில் கழிப்பறை, தத்துருவமாக இருக்கும் வனவிலங்கு சிற்பங்கள் அமைக்கப்பட்டது. இதில் யானை, ஓட்டசிமிங்கி, டைனோசர், மான், புலி உள்ளிட்ட வானவிலங்குகள் இடம்பெற்று இருந்தன.
முதலில் அமைக்கப்பட்ட 2 பூங்காவில் ஒரு பூங்காவில் கலையரங்கம், மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கான அனைத்து விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

2வது பூங்காவில் விஞ்ஞான ரீதியிலான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த விளையாட்டு உபகரணங்கள் அருகே இவை எப்படி இயங்குகிறது என விளக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை அப்போதைய மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். பூங்கா திறக்கப்பட்ட பிறகு பள்ளி மாணவ, மாணவிகள், மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப போதுமான பணியாளர்களை நியமிக்கப்படவில்லை. இதனால் நாட்கள் செல்ல செல்ல பூங்காவில் அமைக்கப்பட்டு இருந்த விளையாட்டு உபகரணங்கள், வனவிலக்கு சிற்பங்கள் சேதமடையதொடங்கியது.

மேலும் பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த அலங்கார விளக்குகளும் சேதமானது. இதன்காரணமாக முக்கடல் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைய தொடங்கியது. பூங்கா பராமரிப்பையும் மாநகராட்சி பெயர் அளவிற்கு செய்தது. தற்போது முக்கடல் அணையில் உள்ள ஊழியர்கள் பூங்காவிற்குள் மக்கள் வரும் வகையில் புற்களை அகற்றிவைத்துள்ளனர். முக்கடல் அணையில் உள்ள 3 பூங்காவையும் பராமரித்து போதிய ஆட்களை நியமித்தால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சி சுமார் ரூ.2 கோடி செலவில 3 பூங்காக்களை முக்கடல் அணை முன்பு அமைத்துள்ளது. பூங்காக்கள் அமைக்கப்பட்டபோது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வந்தது. ஆனால் பராமரிப்பு இல்லாத காரணத்தால், 3 பூங்காக்களும் சிதலம் அடையும் நிலைக்கு உள்ளது. தற்போது வரும் சுற்றுலா பயணிகள் பூங்காக்கள் கிடப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் செல்லும் நிலை இருந்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களை சரிசெய்யும், புல்புதர்களை அகற்றி பூங்காவை புதுப்பிக்க வேண்டும். என்றார்.

Tags : NAGARGO ,NAGARCO ,TRI-SEA ,DAM ,PUTANASAM ,Three Seas Dam ,
× RELATED ‘‘ஆய்வு செய்ய வந்துள்ளோம்’’ என்று...