டெல்லி: பயங்கரவாதம், சைபர் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், சிறார் துஷ்பிரயோகம், நிதி மோசடிகளுக்கு டெலிகிராம் பயன்படுகிறது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்தது. செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்களால், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களைப் எளிதில் கண்டறிய முடிவதில்லை. இது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இந்தியாவில் தற்காலிக தடைக்கு எதிராக டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
