சென்னை: சென்னையில் ஜூன் 21 ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் அன்று வார அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஆயினும் வார இறுதி அட்டவணையில் இல்லாமல் வாராந்திர அட்டவணையில் ரயில்கள் இயங்கும் என்றும் மாணவர்களுக்கு உதவ முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு நீட் உதவி மையங்களும் அமைக்கப்படவுள்ளன என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
