×

நீட் மறுதேர்வு முன்னேற்பாடுகள் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் நீட் மறுதேர்வு முன்னேற்பாடுகள் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நீட் மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

வினாத்தாள் கசிவு காரணமாக மே 3ம் தேதி நடைபெற்று முடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு வரும் ஜூன் 21ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவான ஆலோசனையை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நடத்தி வருகிறார். மாநில மற்றும் யூனியன் பிரதேச தேர்வு மையங்களின் பொறுப்பாளர்கள் வீடியோ காணொளி மூலமாக ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

குறிப்பாக இந்த முறை நீட் தேர்வு வினாத்தாள் வெளியாகாமல் இருக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய ராணுவத்தை பயன்படுத்தி வினாத்தாள்கள் தேர்வு மையகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில் அந்த செயல்பாடுகள் எவ்வாறு நடந்து வருகின்றது என்ற விளக்கத்தையும் அதிகாரிகளின் அமைச்சர் கேட்டு தெரிந்து கொண்டதாக மத்திய அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

முக்கியமாக வினாத்தாள்களை கையாள்பவர்கள் ரகசியத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் மத்திய அமைச்சர் உத்தரவாக குறிப்பிடத்தாக கூறப்பட்டுகிறது. ஏற்கனவே வினாத்தாள் கசிந்தது போல நீட் தேர்வு குறித்து சமூகவலைதளங்களின் மூலமாக தவறான தகவல்கள் பரவுவதை தவிர்க்கும் வகையில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Union Education Minister ,Dharmendra Pradhan ,NEET ,Delhi ,National Testing Agency ,Union Education Ministry… ,
× RELATED லிவ்-இன் உறவில் வாழ்ந்த காதல் ஜோடி;...