- பிரான்ஸ்
- செனகல்
- எம்பிப்பே
- நியூ ஜெர்சி
- சவுண்ட்லைஃப் ஸ்டேடியம்
- நியூ ஜெர்சி, அமெரிக்கா
- உலகக் கோப்பை குழு
நியூ ஜெர்சி: உலகக் கோப்பை கால்பந்து குரூப் ‘ஐ’ பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள மெட்லைப் மைதானத்தில் நேற்று பிரான்ஸ், செனகல் அணிகள் மோதின. முதல் பாதியில் செனகல் அணி பிரான்சுக்கு கடும் சவால் அளித்தது. ஆனால் 2வது பாதியில் பிரான்ஸ் அணி ஆட்டத்தின் வேகத்தை வெகுவாக அதிகரித்தது. ஆட்டத்தின்போது கிலியன் எம்பாப்பே அதிரடியாக 2 கோல்களை அடித்து அசத்தினார். மற்றொரு பிரான்ஸ் வீரரான பிராட்லி பார்கோலா, செனகல் கோல்கீப்பர் எடுவார்ட் மெண்டியை ஏமாற்றி ஒரு லாவகமான கோல் அடித்தார். இதனால் பிரான்ஸ் 3-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் செனகலின் இப்ராகிம் எம்பாய் ஆறுதல் கோல் அடிக்க, பிரான்ஸ் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் 27 வயதான கிலியன் எம்பாப்பே தனது ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கையை 14 ஆக உயர்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜெர்மனியின் கெர்ட் முல்லருடன் (14 கோல்கள்) இணைந்துள்ளார்.
