×

அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்

 

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினார். ஏற்கனவே 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நிலையில் சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள விஜயபாஸ்கர் ஓரிரு நாளில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமை மீது நிலவும் அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார்.

த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரத்தில் நான்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்துவிட்டனர். சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் இருவரைத் தவிர, ஏனைய எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். ஆனால், எடப்பாடியைச் சந்திக்காமலேயே விராலிமலைக்குத் திரும்பிய சி.விஜயபாஸ்கர், தொகுதியின் வட்டம், நகரம் எனத் தன் ஆதரவாளர்களை வீட்டுக்கு வரவழைத்து அடுத்தகட்ட நகர்வு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதற்கிடையே புதுக்கோட்டை அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளாகப் பொறுப்பு வகித்துவந்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் பலர் அ.தி.மு.க-விலிருந்து விலகி, புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர் பர்வேஸ் முன்னிலையில் த.வெ.க-வில் இணைந்துவருகின்றனர். விஜயபாஸ்கரின் இணைப்பு குறித்து மேல்மட்ட த.வெ.க-வில் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு வாரங்களில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அவர்மீது இருக்கும் வழக்குகளின் அடுத்தடுத்த நகர்வுகள் விஜயபாஸ்கருக்கு முட்டுக்கட்டையாக இருப்பதால், தாமதம் காட்டி வருவதாகக் கூறுகின்றனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ள விஜயபாஸ்கர்,தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும் உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா என்று பதிவிட்டுள்ளார்.

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின், அவர் மாற்று கட்சியில் இணையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாற்று கட்சியில் இணைவது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வரும் விஜயபாஸ்கரை, தவெகவில் இணையுமாறு அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

Tags : Former Minister ,Viralimalai M. L. Eumana C. Vijayabaskar ,Chennai ,Speaker ,J. C. D. ,Prabhakar ,M. L. A. ,C. Vijayabaskar ,
× RELATED பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500...