சென்னை: ராமநாதபுரம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிர்வரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் காவல் நிலைய மணல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலையில் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் பறிமுதல் செய்து தேவிப்பட்டினம் காவல் நிலையத்திற்கு தலைமைக் காவலர் மகேஷ்குமார் என்பவர் ஓட்டி வந்தபோது ராமநாதபுரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மோதியதில் தலைமைக் காவலர் பின்பக்கத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமானச் செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
தலைமைக் காவலர் மகேஷ்குமார் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும். அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மகேஷ்குமார் அவர்களை உறவினர்கள் இழந்துவாடும் அவரது மற்றும் குடும்பத்தினருக்கும். அவரது அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
