×

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிப்பூ விலை அதிரடியாக உயர்வு!

 

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிப்பூ விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த நாட்களில் ஒரு கிலோ ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிப்பூ, தற்போது கிலோ ரூ.1,050 ஆக அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மல்லிகை வரத்து குறைந்துள்ளது. மேலும், இன்று அமாவாசை என்பதால் பூக்களின் தேவை அதிகரித்ததே இந்த திடீர் விலை உயர்வுக்குக் காரணமாகும்.

 

Tags : Hyacinth ,Satyamangalam Flower Market ,Erode ,Satyamangalam ,market ,Erode district ,Sathyamangalam ,
× RELATED டெல்லி துக்ளகாபாத் 5 மாடி...