புதுடெல்லி: அசாம் மாநிலம் சில்சார் தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்பியான சுஷ்மிதா தேவ், கடந்த 2021ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும், மாநிலங்களவை எம்பியாகவும் செயல்பட்டு வந்தார்.
கட்சியின் மூத்த தலைவர் சுகேந்து சேகர் ராய் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து வெளியேறியநிலையில், மாநிலங்களவை எம்பி பதவியையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் சுஷ்மிதா தேவ் நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.
