×

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு.!! வெள்ளி விலையில் மாற்றமில்லை…

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது. இதனை அடுத்து ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.14,070-க்கும், ஒரு சவரன் விலை ரூ.1,12,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், எப்போதும் தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கம். இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1840 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ .230 குறைந்து ஒரு கிராம் ரூ.14,200-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.270-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,070க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,
× RELATED டெல்லி ஹோட்டல் தீ விபத்து: நைஜீரிய...