×

கீழே தள்ளிவிட்டு போதை வாலிபரிடம் செல்போன் திருட்டு

வேளச்சேரி, ஜூன் 8: மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் புஸ்கேந்திரா (26). இவர் கந்தன்சாவடியில் வீடு வாடகை எடுத்து தங்கி, தனியார் மருத்துவமனையில் பிளம்பராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தரமணியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்தி உள்ளார். அப்போது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால், நடக்க முடியாமல் தள்ளாடியபடி சென்றுள்ளார்.

அப்போது சிலர் அவரை கீழே தள்ளி விட்டு அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூபாய் 20,000 மதிப்புள்ள மொபைல் போனை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் தரமணி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : VELACHERI ,BUSKENDRA ,MADHYA PRADESH STATE ,Kandansawadi ,Tasmak ,Taramani ,
× RELATED வலி நிவாரண மாத்திரை விற்ற ரவுடி சிக்கினார்