- ஆரணி ஆண்கள் அரசுப் பள்ளி
- Uthukottai
- அரசு பாய்ஸ் மேல்நிலைப் பள்ளி
- ஆரணி டவுன் பஞ்சாயத்து
- Periyapalayam
- திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகிறார்கள். வெளியூரில் இருந்து படிக்கவரும் மாணவர்கள் இங்குள்ள பழங்குடியின மாணவர் நல விடுதியில் தங்கியுள்ளனர். தற்போது அந்த விடுதி பழுதடைந்துவிட்டதால் அவற்றை அகற்றிவிட்டு புதிய மாணவர்கள் நல விடுதி கட்டவேண்டும் என்று பெற்றோரும் சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து தாட்கோ திட்டம் மூலம் ₹ 1.60 கோடி மதிப்பீட்டில் மாணவர் விடுதி கட்டப்பட்டது. கடந்த 2023ம் வருடம் இறுதியில் மாணவர் விடுதி திறக்கப்பட்டது. ஆனால் 2024 – 2025 மாணவர்கள் வரவில்லை. 2026-2027 ம் ஆண்டுக்காக விடுதிக்கு மாணவர்கள் சரிவரவராததால் பூட்டியே கிடக்கிறது. விடுதியை சுற்றி செடி, கொடிகள் படர்ந்து புதர்கள் மண்டி காணப்படுகிறது. ‘’வீணாகும் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா என்று மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
