தேனி: கம்பத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் கம்பம் மெட்டு சாலை பராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜூன் 8) முதல் ஒரு மாதத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடாக குமுளி மலைச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த நெடுஞ்சாலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
