திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே தனியார் கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது வழக்குப்பதிவு செய்தனர். விடுதி வார்டன் பாலியல் ரீதியிலான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கல்லூரி மாணவிகள் புகார் அளித்துள்ளனர். மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு விடுதி வார்டன் இரவு நேரத்தில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் அளித்தனர். மாணவிகள் அளித்த புகாரின் பேரில் தாளாளர் செல்வகுமார் உள்ளிட்ட 6 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். திண்டுக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தியிடம் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் சென்று புகாரளித்துள்ளனர்
