×

பொறியியல் கலந்தாய்வு 3,01,519 பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பொறியியல் பல்கலை. கல்லூரிகளில் பி.இ, பி.டெக். இளநிலை பொறியியல் படிப்பு அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்தனர். மே 3ம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு முதலில் ஜூன் 2ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டது.

பிறகு கால நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், இதற்கு 3,01,519 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2,43,476 பேர் விண்ணப்பத்திற்கான கட்டணத்தையும், 2,23,599 பேர் சான்றிதழ்களை பதிவேற்றமும் செய்துள்ளனர். விண்ணப்பப் பதிவு செய்தவர்கள் தங்கள் சான்றிதழ்களை இன்றைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Tags : Chennai ,B.E. ,B.Tech ,Tamil Nadu ,
× RELATED திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள்...