×

உலக சுற்றுச்சூழல் தினம் முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை: முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் இன்று எடுக்கும் முடிவுகள்தான் நம் நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.

இந்நாளில், மரக்கன்றுகளை நட்டு, நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நெகிழிப் பயன்பாட்டை குறைத்து, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட உறுதியேற்போம். நமது சிறிய முயற்சிகளே நாளைய தலைமுறைக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் பசுமையான உலகை உருவாக்கும். இயற்கையை காப்போம்; நம் எதிர்காலத்தை வளமாக்குவோம்.

Tags : Chief Minister ,Vijay ,World Environment Day ,Chennai ,
× RELATED திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள்...