சென்னை: உங்களிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது; என்னிடம் இருந்து உங்களையும் யாராலும் பிரிக்க முடியாது. சேப்பாக்கம் தொகுதி திமுகவின் கோட்டை என்பதை நிர்வாகிகள் நிரூபித்துள்ளீர்கள் என்று சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி திமுக நிர்வாகிகளுக்கான நன்றி தெரிவித்தல் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையற்றியுள்ளார்.
புதிய அரசு பொறுப்பேற்று 25 நாட்கள் ஆயிற்று; உருப்படியாக ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்களா?. ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி ‘சிங்கப்பெண்’ என்ற திட்டத்தை கொண்டு வருவோம் எனச் சொல்லி, அதையும் செய்ய முடியாத, சோஃபா மாடல் ஆட்சிதான் இது.
வாக்களித்த மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் யார் என்றே தெரியாத நிலை உள்ளது: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு தங்களின் தொகுதி கூட தெரியாது. இன்னும் சொல்லப்போனால், முதலமைச்சருக்கே எம்.எல்.ஏ.க்கள் யார் யாரென்று தெரியாது. தோல்வி நிரந்தரம் அல்ல, மீண்டும் வென்று காட்டுவோம்.
களத்தில் யார் எதிரி என்பதை உணராமல், இல்லாத எதிரிகளோடு சண்டை போட்டுள்ளோம். அடுத்த முறை உண்மையான எதிரி யார் என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப செயல்பாடுகள் இருக்கும். இனி வரும் காலங்களில் நமது வீட்டில் உள்ள உறுப்பினர்களை அரசியல்படுத்துவோம்
நமது பெயரை கூறி வாக்கு பெற்று வெற்றி பெற்றவர்கள் நம் தலைவரை பார்த்து நன்றி கூட சொல்லவில்லை. நன்றி கெட்ட கூட்டம்தான் அது, இதனை திமுக மறக்காது என்று காங்கிரஸ் மீது உதயநிதி கடும் விமர்சனம் செய்துள்ளார். மற்றவர்கள்கூட சொல்லிவிட்டுதான் சென்றார்கள், ஆனால் ஆசை யாரைவிட்டது? முதலில் எல்லா அலுவலகத்துக்கு சோஃபா செல்லும், அதன் பிறகு முதல்வர் செல்வார், பிறகு அமைச்சர் பதவி கிடைக்கும்.
நடிகர் வடிவேலு வசனம் போல், பதிமூன்றும் ஜோக்கராக இருந்தால் என்ன செய்வது என்பது போல் தற்போதைய ஆட்சி உள்ளது. இவரெல்லாம் ஒரு முதலமைச்சரா என்று மக்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர். எப்போதும் முதலமைச்சர் வாயில் இருந்து வருவது திமுகதான்
திரைக் கவர்ச்சி இல்லாமல் எதை வைத்து ஆட்சிக்கு வந்தீர்கள் என்பதை சொல்லுங்கள் பார்க்கலாம். மிசாவில் சிறைக்கு சென்றீர்களா? அல்லது ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுத்தீர்களா. வாயில் நல்லா வந்துரும் என்கிறார் முதலமைச்சர்; தமிழ்நாட்டு மக்கள் ஏதாவது சொல்லிவிட போகிறார்கள். 3ம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, வள்ளுவருக்கு காவிச் சாயம் அடித்தது பற்றி பேச வக்கில்லாதவர்தான் முதலமைச்சர்.
மேகதாது அணை விவகாரத்திலும் எதுவும் பேச வக்கில்லாத ஆட்சிதான் தற்போது நடக்கிறது. ஆறு மாதம் சும்மா இருப்பேன் என்று சொன்னீர்களே என்று கூறி முதலமைச்சர் அழுகிறார். தெரியாமல் வாக்களித்துவிட்டோமே என்று மக்கள் வருந்தும் அளவுக்கு தற்போதைய ஆட்சி உள்ளது. மன்னார்குடி எம்.எல்.ஏ.வை, அக்கட்சி தலைவருக்கே தெரியாமல் கடத்தியதுதான் தூய சக்தியா?.
தூரசக்தி, பராசக்தி என டி.ஆர். போல முதலமைச்சர் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். கவுண்டமணி-செந்தில் இளநீர் காமெடியை போலத்தான் தவெக ஆட்சி செய்கிறது. பெரியாரின் நினைவாக கருப்பு கோட் அணிவதாக முதலமைச்சர் சொல்கிறார், இதைவிட பெரிய உருட்டு உள்ளதா. முதல்வர் கோட், சூட் அணிவது பிரச்சனை இல்லை, கோட்டை விடுவதான் பிரச்சனை
ரூ.2,500 உரிமைத் தொகை, 6 இலவச சிலிண்டர், தாய்மாமன் சீர் என பல திட்டங்களை அள்ளிவிட்டுள்ளீர்கள். நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை விட மாட்டோம் உங்களுக்கு எதிராக குரல் கொடுப்போம், களத்துக்கு வந்தும் போராடுவோம். மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை. 1976ல் அவசர நிலையின்போது ஆட்சியே போனாலும் பராவாயில்லை என்று மக்களுக்காக நின்ற கட்சி திமுக
