×

இந்தியாவிற்கு அதிக மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது…

டெல்லி: தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதமே தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தற்போது கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழையை தர கூடியது இந்த தென்மேற்கு பருவமழை தான். தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம் குறைந்த மழையே பெறுகிறது. குறிப்பாக தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி பகுதிகள் நல்ல மழை பெறும்.

தென்மேற்கு பருவமழையை பொறுத்த வரை தமிழகம் மழை மறைவு மாநிலமாக இருந்தாலும் கூட, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட முக்கிய அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வர கூடிய நீர் இந்த பருவமழையை சார்ந்தே இருக்கிறது. காவிரி, முல்லை பெரியாறு போன்ற அணை விவகாரங்களில் நாம் அண்டை மாநிலங்களை சார்ந்து இருக்கிறோம். அந்த மாநிலங்களோ தென்மேற்கு பருவமழையை சார்ந்தே இருக்கின்றன.

இதனால் தமிழகத்திற்கும் இந்த மழை முக்கியமான ஒன்று. இதன் போது மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். அதே போல தென்மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளும், தென்மேற்கு பருவமழை காலகட்டத்தின் போது தான் நிறையும். நாட்டிலுள்ள சுமார் 70 சதவீதத்திற்கும் மேற்ப்பட்ட பகுதிகள் இந்த தென்மேற்கு பருவமழை காரணமாகவே மழையை பெறுகின்றன. தமிழகம், புதுவை உள்ளிட்ட சில பகுதிகள் மட்டுமே வடகிழக்கு பருவமழையை சார்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,Delhi ,Indian Meteorological Centre ,Andaman ,Kerala ,
× RELATED கல்வி கட்டண விவரங்களை பள்ளிகள்...