×

நார்வே செஸ் தொடர்: கார்லசனை 2 முறை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை

ஆஸ்லோ: உலகின் முன்னணி வீரர்கள் 6 பேர் பங்கேற்கும் 14வது நார்வே செஸ் தொடர் ஆஸ்லோ நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டி மொத்தம் 10 சுற்றுகள் கொண்டது. இதில் உள்ளூர் நாயகனும், நம்பர் 1 வீரருமான நார்வேயின்மேக்னல் கார்லசனை இந்தியாவின் இளம் நட்சத்திரம் பிரக்ஞானந்தா (20) 3வது சுற்றில் வீழ்த்திருந்தார். இந்நிலையில், நேற்று நடந்த 8வது சுற்றில் கிளாசிக்கல் பிரிவில் மீண்டும் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். இதன்மூலம் ஒரே தொடரில் கார்ல்சனை 2 முறை தோற்கடித்த 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

2007ல் நடந்த லினாரஸ் சர்வதேச செஸ்தொடரில் கிளாசிக்கல் பிரிவில் கார்லசனை இந்தியாவின் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் 2 முறை வீழ்த்தினார். 19 ஆண்டுகளுக்கு பின் ஒரே தொடரில் கார்ல்சனை 2 முறை வீழ்த்தி விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையை பிரக்ஞானந்தா சமன் செய்து உள்ளார்.

மேலும், இந்த ஆண்டில் உலகின் நம்பர் 1 வீரரை கிளாசிக்கல் ஆட்டங்களில் 2 முறை தோற்கடித்த முதல் வீரரும் பிரக்ஞானந்தா ஆவார். இன்னும் 2 சுற்று மீதமுள்ள நிலையில், அமெரிக்காவின் வெஸ்லி சோ 14 புள்ளுகளுடன் முதல் இடத்திலும், 13 புள்ளிகளுடன் பிரான்சின் அலிரெஜா 2ம் இடத்திலும், பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் 3வது இடத்திலும் உள்ளார். உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளார்.

Tags : Norway Chess Series ,Praggnanandhaa ,Carlsen ,Oslo ,14th Norway Chess Series ,Norway ,Magnall Carlsen ,India's… ,
× RELATED இந்தியா vs நியூசிலாந்து 2026 கிரிக்கெட் சீரிஸ் அட்டவணை வெளியீடு