×

இந்தியா vs நியூசிலாந்து 2026 கிரிக்கெட் சீரிஸ் அட்டவணை வெளியீடு

டெல்லி: இந்த ஆண்டு (2026) வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 12 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடருக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணி வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இதன் போது மொத்தம் 5 டி20 போட்டிகள் (T20I), 5 ஒருநாள் போட்டிகள் (ODI) மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் 22-ஆம் தேதி டி20 தொடரும், நவம்பர் 4-ஆம் தேதி ஒருநாள் கிரிக்கெட் தொடரும், நவம்பர் 19-ஆம் தேதி டெஸ்ட் தொடரும் துவங்கி நடைபெற இருக்கிறது. விவரங்கள் கீழே…

1. டி20 தொடர் அட்டவணை (T20I Series):

அக்டோபர் 22: முதல் டி20 போட்டி, இடம்: கிரைஸ்ட்சர்ச்

அக்டோபர் 24: இரண்டாம் டி20 போட்டி, இடம்: கிரைஸ்ட்சர்ச்

அக்டோபர் 27: மூன்றாம் டி20 போட்டி, இடம்: வெல்லிங்டன்

அக்டோபர் 30: நான்காம் டி20 போட்டி, இடம்: ஆக்லாந்து

நவம்பர் 1: ஐந்தாம் டி20 போட்டி, இடம்: ஹாமில்டன்

2. ஒருநாள் தொடர் அட்டவணை (ODI Series):

நவம்பர் 4: முதல் ஒருநாள் போட்டி, இடம்: ஆக்லாந்து

நவம்பர் 7: இரண்டாம் ஒருநாள் போட்டி, இடம்: வெல்லிங்டன்

நவம்பர் 10: மூன்றாம் ஒருநாள் போட்டி, இடம்: ஹாமில்டன்

நவம்பர் 13: நான்காம் ஒருநாள் போட்டி, இடம்: மவுண்ட் மாங்கானுய்

நவம்பர் 15: ஐந்தாம் ஒருநாள் போட்டி, இடம்: மவுண்ட் மாங்கானுய்

3. டெஸ்ட் தொடர் அட்டவணை (Test Series);

நவம்பர் 19 – 23: முதல் டெஸ்ட் போட்டி, இடம்: வெல்லிங்டன்

நவம்பர் 27 – டிசம்பர் 1: இரண்டாம் டெஸ்ட் போட்டி, இடம்: கிரைஸ்ட்சர்ச்

Tags : India ,New Zealand ,2026 Cricket Series ,Delhi ,
× RELATED ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்;...