×

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்; முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி: ஸ்ரீகாந்த், சென் தோல்வி

ஜகார்த்தா: இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தின் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புசானன் மோதினர். இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 25-23, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் மால்விகா பான்சோட் 12-21, 10-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த போர்ன்பாவீ சோச்சுவோங்விடம் தோல்வியடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த கிடம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானை சேர்ந்த யுஷி தனகாவுடன் மோதினார். இதில், 19-21, 15-21 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென், இந்தோனேசியாவை சேர்ந்த அல்வி ஃபர்ஹான் உடன் மோதினார். இதில் 21-19, 21-16 என்ற செட் கணக்கில் அல்வி வென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஹரிஹரன் அம்சகருணன், அர்ஜூன் ஜோடி, மலேசியாவை சேர்ந்த அஸ்ரின், டான் வீ கியோங் ஜோடி மோதியது. இதில் 21-18, 21-10 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் காயத்ரி கோபிச்சந்த் புல்லேலா, ட்ரீசா ஜாலி ஜோடி, இந்தோனேசியாவை சேர்ந்த குசுமா, புஷ்பிதாசரி ஆகியோர் மோதினர். இதில் இந்தோனேசிய ஜோடி 21-14,21-12 என்ற செட் கணக்கில் வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா க்ராஸ்டோ ஜோடி தோல்வியடைந்தது.

Tags : Indonesia Open Badminton ,PV Sindhu ,Srikanth ,Sen lose ,Jakarta ,India ,Thailand ,Busanan ,
× RELATED டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய புரட்சி;...