வார தொடக்க நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1040 குறைந்தது

 

சென்னை: கடந்த 29ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து கிராம் ரூ.14,630க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 17,040க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.290க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.

கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,500க்கும், பவுனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 16,000க்கும் விற்றது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையானது. வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

Related Stories: