சென்னை: பள்ளி திறப்பை ஒட்டி வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்புவதால் சென்னை செல்லும் விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளது. வெளியூர் சென்றவர்கள் ஒட்டுமொத்தமாக சென்னை திரும்புவதால் மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, திருவனந்தபுரம், கொச்சியில் இருந்து சென்னைக்கு வரும் விமான கட்டணங்கள் 3 மடங்கு உயர்ந்துள்ளது.
மதுரையில் இருந்து சென்னைக்கு சாதாரண நாளில் ரூ.5,800 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.17,303-ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சாதாரண நாளில் ரூ.6,600-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.17,272-ஆக உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னைக்கு சாதாரண நாளில் ரூ.4500 -ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.14,404-ஆக உயர்ந்துள்ளது. கோவை – சென்னைக்கு சாதாரண நாளில் ரூ.4,744-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.16,504-ஆக உயர்ந்துள்ளது. திருவனந்தபுரம் – சென்னைக்கு சாதாரண நாளில் ரூ.5,700-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.13,516-ஆக உயர்ந்தது.
