×

தமிழ்நாட்டிற்கு பெருமை முப்படை தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி பதவியேற்பு

புதுடெல்லி: இந்திய முப்படையின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய ராணுவத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட முப்படை தலைமை தளபதி பதவிக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டின் முதலாவது முப்படை தலைமை தளபதியான ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2021ம் ஆண்டு நடந்த விபத்தில் காலமானதைத் தொடர்ந்து, நாட்டின் 2வது தலைமை தளபதியாக ஜெனரல் அனில் சவுகான் கடந்த 2022ம் ஆண்டு பொறுப்பேற்றார்.

தனது பதவிக்காலத்தில் ராணுவத்தின் நவீனமயமாக்கல் மற்றும் வியூகம் சார்ந்த செயல்பாடுகளில் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்ட ஜெனரல் சவுகானின் பதவிக்காலம் கடந்த 30ம் தேதியுடன் முடிந்தது. இதேபோல, கடற்படை தளபதியாக பணியாற்றிய அட்மிரல் தினேஷ் திரிபாதியும் தனது பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, ஒன்றிய பாதுகாப்புத் துறையில் உயர்மட்ட தலைமை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, நாட்டின் 3வது முப்படை தலைமை தளபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணியை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. இவர் கடந்த 1985ம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்வால் ரைபிள்ஸ் பிரிவில் இணைந்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் கிழக்கு எல்லைப் பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த ராணுவ அனுபவம் பெற்றவராவார்.

இதேபோல, கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டு, அவர் இன்று பொறுப்பேற்கிறார். அதேபோல் முப்படையின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முப்படைகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சைபர் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் எலக்ட்ரானிக் போர்முறை போன்ற நவீன தொழில்நுட்பங்களை 40 ஆண்டுகளுக்கும் மேலான ராணுவ அனுபவம் கொண்ட ஜெனரல் சுப்ரமணி தலைமையிலான புதிய கட்டமைப்பு, நாட்டின் பாதுகாப்பை மேலும் நவீனப்படுத்தவும், முப்படைகளின் கூட்டுத் திறனை அதிகரிக்கவும் உதவும் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Tamil Nadu ,Commander ,Tripartite Army ,Raja Subramani ,New Delhi ,Lieutenant General ,N. S. Raja Subramani ,-Force ,Indian Army ,
× RELATED தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த...