×

மேகதாது பகுதியில் முற்றுகை: தஞ்சை விவசாயிகள் பயணம்

 

தஞ்சை: கர்நாடகா அரசின் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை சட்ட விரோதம் என ஒன்றிய அரசு நிராகரிக்க வேண்டும். மாதாந்திர அடிப்படையில் தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து காவிரி மேலாண்மை ஆணையம் பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கர்நாடகா அரசை கண்டித்தும் வாகன பேரணியாக சென்று மேகதாது பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி இன்று சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் தஞ்சை ராஜராஜசோழன் சிலை முன்பு திரண்டனர். பின்னர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் கர்நாடகா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான விவசாயிகள் தஞ்சையில் இருந்து பேரணியாக திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர். திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே வந்த விவசாயிகளுக்கு திருச்சி மாவட்ட விவசாயிகள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து நாமக்கல், சேலம், தர்மபுரி வழியாக ஒசூருக்கு செல்ல உள்ளனர். இன்று இரவு ஒசூரில் தங்கும் விவசாயிகள் நாளை (31ம் தேதி) காலை ஜூஜூவாடி வழியாக கர்நாடகா மாநிலத்திற்குள் நுழைந்து மேகதாது பகுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

Tags : Megadhat ,Thanjay ,EU government ,Karnataka government ,Megathu Dam ,Tamil Nadu ,Karnataka ,Caviar Management Commission ,
× RELATED அண்ணா அறிவாலயத்தில் Gen Z திமுக என்னும்...