×

இன்று வைகாசி வளர்பிறை கடைசி முகூர்த்தம்; பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் 120 ஜோடிகளுக்கு திருமணம்: வாக்குவாதம், தள்ளுமுள்ளுவால் பரபரப்பு

 

வாழப்பாடி: வாழப்பாடி அருகேயுள்ள பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் முகூர்த்த நாளான இன்று ஒரே நாளில் 120க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. அப்போது தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மிகவும் பழமை வாய்ந்த பேளூர் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு முக்கிய சுப முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடப்பது வழக்கம். இன்று வைகாசி மாதம் வெள்ளிக்கிழமை வளர்பிறை கடைசி சுப முகூர்த்த நாள் என்பதால் திருமண ஜோடிகள் கூட்டம் அலைமோதியது.

உள்ளூர் மட்டுமின்றி வாழப்பாடி, சேலம், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இன்று அதிகாலை முதல் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் நடைபெற்றது. இதற்காக சுமார் 3:30 மணியில் இருந்தே மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் நீண்ட நேரம் காத்திருந்தனர். இன்று 120க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதில் கோயிலில் தாலி கட்டும் இடத்திற்கு பாய் போடுவதில் மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் முண்டியடித்து சென்றனர்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதங்கள், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோயில் முழுவதும் இன்று காலை மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஏராளமான திருமணங்கள் தள்ளுமுள்ளுவுடன் நடைபெற்றது. இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயில் என்பதால் இங்கு முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகிறது. இவ்வாறு தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க தமிழக அரசும், கோயில் நிர்வாகமும் முறையான நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Vaikasi ,Belur Thanthonreeswarar temple ,Vazhappadi ,Salem ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்தியநாத...