- துரோகி சத்யபாமா
- தவெகா
- திருப்பூர்
- மாஜி ஆதிமுக எம். ஏ
- சத்தியபாமா
- தவேகாவில்
- Darapuram
- தாராபுரம்
- ஆதிமுகா
- சட்டமன்ற உறுப்பினர்
- டவேகா
- சத்யபம ஆடமுவ
திருப்பூர்: தவெகவில் இணைந்த மாஜி அதிமுக எம்எல்ஏ சத்தியபாமாவை கண்டித்து தாராபுரம் தொகுதி முழுவதும் போஸ்டர்களை ஒட்டி aஅதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அதிமுக எம்எல்ஏ சத்தியபாமா அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தார். இதனால் அதிமுகவினரும், தொகுதி மக்களும் அதிர்ச்சியடைந்தனர். அதிமுகவினர் சத்தியபாமாவின் புகைப்படத்தை செருப்பால் அடித்தும், கொளுத்தியும் கண்டன கோஷம் எழுப்பினர். மேலும் தொகுதி முழுவதும் சத்தியபாமாவுககு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அதில் ‘‘அதிமுக தொண்டர்களின் வியர்வை சிந்திய உழைப்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகி தற்போது தவெகவின் குதிரை பேரத்திற்கு விலைபோன துரோகி சத்தியபாமாவை வன்மையாக கண்டிக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை தாராபுரத்தில் சத்தியபாமா நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி விடுதியில் தங்கியபோது எடப்பாடி பழனிச்சாமி திமுகவுக்கு ஆதரவு கொடுப்போம் என்றார். யாரை எதிர்த்து பேசி வெற்றி பெற்றோமோ அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதா? என நினைத்தோம். அதன்பின்னர் எடப்பாடி பழனிச்சாமி எங்களிடம் விசிக தலைவர் தொல். திருமாவளவனை முதல்வராக திட்டமிட்டுள்ளனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
நான் கூறும் வரை நீங்கள் பொறுமையாக இருங்கள் என்றார். அவர் இப்படி தன்னிச்சையாக செயல்படுவது எங்களுக்கு பிடிக்கவில்லை. எங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் திமுகவுடன் இணைய வேண்டும் என அழுத்தம் கொடுத்ததால் வேறு வழி இல்லாமல் தவெகவில் இணைந்தோம். குதிரை பேரம் நடக்கவில்லை. இடைத்தேர்தலில் நிற்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
