×

சென்னை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் அமைச்சர் வ. காந்திராஜ் ஆய்வு

 

கூட்டுறவுத்துறை அமைச்சர் வ. காந்திராஜ் நேற்று சென்னை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டார். வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையால் நடத்தப்படும் பண்ணை பசுமை காய்கறி கடைகள் கூட்டுறவு மருந்தகம் பொது விநியோகத் திட்ட அங்காடிகள் ஆகியவற்றில் பொருட்களின் தரம் விற்பனை பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பூங்கா நகர் மொத்த விற்பனை பண்டக சாலையின் மூலம் கொடுங்கையூரில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமான பணியின் தரம் மற்றும் திட்ட மதிப்பீடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பண்டக சாலையால் நடத்தப்படும் பண்ணை பசுமை காய்கறி கடைகள் சூப்பர் மார்க்கெட் பேக்கிங் கிட்டங்கி மற்றும் சங்கப் பணியாளர்களுடன் பணியாளர் நலன் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியால் நடத்தப்படும் அண்ணா நகர் கிளையில் பாதுகாப்பு பெட்டகம் மற்றும் கிளையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் குளிர் பதன கிடங்கு குளிர்பானக் கடையின் உள்ளே அனைத்து தளங்களிலும் இருப்பு வைக்கப்பட்ட பொருட்கள், பொருட்களை எடுத்துச் செல்லும் லிப்ட், கிடங்கின் மாதாந்திர வருவாய் விவரங்கள் ஆகியவற்ற ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தினசரி விற்பனை விவரம், ஆரம்ப இருப்பு இறுதி இருப்பு ஆகியவை சரிபார்க்கப்பட்டு விற்பனை அளவு சரிபார்க்கப்பட்டது. விற்பனை செய்யப்படும் அளவானது ஒரு லிட்டர் ஜாரில் பிடிக்கப்பட்டு அளவு சரியாக உள்ளதா என கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கூடுதல் பதிவாளர் பாபு உட்பட அரசு உயர் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Minister ,V. Gandhiraj ,Chennai ,Cooperatives ,North Chennai Cooperative Wholesale Market Cooperative Pharmacy Public Distribution ,
× RELATED ரூ.12,301 கோடியில் சென்னை எல்லை...