புதுடெல்லி: தமிழ்நாடு , கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியில் தீவிர சிறப்பு திருத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் தொடங்கி நடத்தி முடித்துள்ளது. இருப்பினும் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. குறிப்பாக தமிழகத்தை பொறுத்த மட்டில் தமிழ்நாடு அரசு அதேப்போன்று திமுக, கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பட்டியலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மேற்கண்ட மனுக்கள் அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜால்மால்யா பாக்ஷி ஆகியோர் விசாரித்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஷி ஆகியோர் வழங்கிய நேற்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: இந்த விவகாரத்தில் வைக்கப்பட்ட வாதங்களையும், ஆவணங்களையும் ஆராய்ந்த பின்னர் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். அதில் முதலாவதாக எஸ்.ஐ.ஆர் போன்ற ஒரு நடவடிக்கையை நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா?.
இரண்டாவதாக, அதன் அறிக்கையின் கீழான விசாரணை ஒரு சட்டபூர்வமான நோக்கத்தின் அடிப்படையில் அமைந்ததா, அவ்வாறாயின், தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அடையப்பட வேண்டிய இலக்குகளுக்கு விகிதாசாரமானவையா? மூன்றாவதாக, எஸ்.ஐ.ஆர் வழக்கின் விசாரணையை நடத்துவதில் தேர்தல் ஆணையத்தால் பின்பற்றப்பட்ட நடைமுறையானது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950ன் விதிகளுக்கு முரணானதா அல்லது மீறுவதாக உள்ளதா என்பதாகும். மேலும் இந்த சிறப்பு மறுஆய்வு மனுக்கள் என்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும் அதன் விதிகளையும் மாற்றி அமைக்கவில்லை.
மாறாக, இது பிரிவு 21(3)-ஆல் வழங்கப்பட்ட துல்லியமான சட்டப்பூர்வ வரையறைகளுக்குள், அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் உள்ள அரசியலமைப்பு ஆணைக்கு உயிர் கொடுக்கிறது. எனவே வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அதன் அதிகார வரம்பை மீறி செயல்பட்டுள்ளது என்று கூற முடியாது. குறிப்பாக எஸ்.ஐ.ஆரின் நோக்கம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் என்ற அரசியலமைப்பு இலக்குடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளது என்பதில் உச்ச நீதிமன்றம் முழு திருப்தி அடைகிறது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் வெறும் வாக்குப்பதிவு முறைகளை மட்டும் சார்ந்திருப்பது கிடையாது.
அவை ஜனநாயக செயல்முறையின் அடித்தளமாக விளங்கும் வாக்காளர் பட்டியல்களின் நேர்மை, துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இதில் கடைசியாக எஸ்.ஐ.ஆர் பணி மறுஆய்வுக்குப் பிறகு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கடந்தது, பல ஆண்டுகளாக நிகழ்ந்த பெருமளவிலான சேர்க்கைகள் மற்றும் நீக்கங்கள், விரைவான நகரமயமாக்கல், இடம்பெயர்வு ஆகியவற்றின் விளைவாக வாக்காளர் பட்டியல்களில் மீண்டும் தொடர்ந்து வருதல் மற்றும் தவறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகிய ஆணைத்தும் சரி செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகி உள்ளது. மேலும் வாக்காளருக்கன ஆவணங்களின் செல்லுபடித் தன்மை என்பது 11 ஆவணங்களைக் அடிப்படையாக கொண்டது ஆகும்.
எனவே உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் ஆதார் அட்டையை ஆதார ஆவணமாக சேர்த்த பின்னரும், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் கேட்கப்படும் ஆவணங்களின் தொகுப்பு தன்னிச்சையானது என்ற வாதங்களை கண்டிப்பாக ஏற்க முடியாது. குறிப்பாக தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர் சட்டரீதியாக செல்லும் . எஸ்.ஐ.ஆர் என்பது சட்ட விரோதமானது கிடையாது. அதாவது இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் 1954ன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கும் அது எதிரானது கிடையாது. அதேபோன்று எஸ் ஐ ஆர் நடவடிக்கை மூலம் நீக்கப்பட்ட பெயர்களின் மேல் முறையீடுகள் மீது அடுத்த உள்ளாட்சி, சட்ட பேரவை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறி உள்ளனர்.
