சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வரக்கூடிய சூழலில் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
அதன்படி இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தேனி, மதுரை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
