சென்னை: சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில் அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் சென்னையில் ஆதரவாளர்களுடன் சி.வி.சண்முகம் அவசர ஆலோசனை மேற்கொள்ளபட உள்ளது. ஆலோசனையில் சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி.அன்பழகன், ஹரி, காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்க உள்ளனர்.
