சென்னை: கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட குற்றச்சம்பவம் தொடர்பாக 7 நாட்களில் தமிழக டிஜிபி அறிக்கை அளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு உளவியல் ஆலோசனை, பாதுகாப்பு மற்றும் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது.
