- கே
- ஸ்டாலின்
- சென்னை
- ஜனாதிபதி
- முதல் அமைச்சர்
- கே. சிந்தன் செல்வன்
- பொது செயலாளர்
- விடுதலை சிறுத்தை கட்சி
சென்னை: திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இதயம் நிறைந்த நன்றி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; இந்த தருணத்தில் இந்த துறை சார்ந்தும் நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட மக்கள் தந்த வாய்ப்பை பயன்படுத்தி, நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுவதாக கூறியுள்ளார்.
இதனையயடுத்து 5 ஆண்டுகாலம் எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்தில் கூறுவதாக தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன்” என சிந்தனைச்செல்வன் பதிவிட்டுள்ளார்.
