×

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9,10ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் 3வது மொழி கற்க வேண்டும் என்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் ரோஹத்கி கோரிக்கையை ஏற்று மனுவை அடுத்த வாரம் பட்டியலிட தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் சிபிஎஸ்இ கொள்கையை எதிர்த்து மனுத் தாக்கல் செய்துள்ளனர். 9, 10ம் வகுப்பு பயிலும் சிபிஎஸ்இ மாணவர்கள் கட்டாயம் 2 இந்திய மொழியும், 1 வெளிநாட்டு மொழி கற்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2வது இந்திய மொழிக்கு 10ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடப்படாது என சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் விளக்கமளித்துள்ளது. இருந்தாலும் 3வது மொழி (2வது இந்திய மொழி) மதிப்பெண்கள் சான்றில் பிரதிபலிக்கும் என சிபிஎஸ்இ கூறியிருந்தது.

Tags : Supreme Court ,CBSE ,Delhi ,Chief Justice ,Rohatki ,
× RELATED தமிழ்நாட்டில் ஜூன் 18ம் தேதி...